Saturday, October 29, 2005

தமிழ் வலைப்பதிவு மீமீ - புதிசு கண்ணா புதுசு

புத்தக மீமீ மாதிரி ஒரு புது மீமீய நான் ஆரம்பிக்கிறேன். மற்ற தமிழ் வலைப்பதிவர்களும்,வாசகர்களும் வலைப்பதிவுகளில் உங்களுக்கு என்ன பிடிக்கும்/பிடிக்காதுன்னு எழுதுங்க. நம்ம ரசனை ரொம்ம முக்கியமில்ல. ரெம்ப நாளா எம்மனசுல ஊறப்போட்டு இருந்தத இன்னைக்குப் போட்டுக் காய்ச்சிட்டேன். அத அடிச்ச மப்புல இத எழுதுறேன்.

இதெல்லாம் எதுக்குன்னு கேட்கிறவங்களுக்கு..

1. சீரியசா வலைப்பதிவர்களுக்கு( ரெம்ப கொஞ்சப்பேரு), என்னப் போன்ற கோயிஞ்சாமிகளுக்கு என்ன தேவைன்னு தெரியட்டும்.
2. அழுகிற பிள்ளைக்குதாங்க வாழைப்பழம். வாயத்திறந்து கேட்டதுக்கு அப்புறமாவது நமக்குப் பிடிச்சத நிறைய எழுதுறாங்காளான்னு
பார்ப்போம்.
3. என்னமாதிரியான பதிவுகள் அதிகம் படிக்கப்படுகிறதுன்னு எல்லாத்துக்கும் தெரியுமில்ல. +/- ஓட்டுல எல்லாம் எனக்கு நம்பிக்கை போய் ரெம்ப நாள் ஆச்சுங்க. குறிப்பிட்ட சிலபேர் மட்டும்தான் திரும்ப, திரும்ப வர்றதில எனக்கு ஏதோ உள்குத்து இருக்கும்னு தோணுது. அப்புறம் என்னமாதிரி சோம்பேறிங்க நல்ல பதிவுகளுக்கு ஓட்டுப்போடுறது கிடையாதுன்கிறதால..
4. நமக்கு பிடிச்ச மாதிரி எழுதுறவங்கல பாராட்டுற மாதிரி இருக்கும்.
5, அவங்க பதிவுகள்ள பின்னூட்டம் இட்ட மாதிரி இருக்கும். அப்பா, அம்மாவ சுத்தி ஞானப்பழம் முருகன் வாங்கினமாதிரி, இங்க நம்ம சொல்றது அவங்க எல்லாப்பதிவுலயும் சொன்னமாதிரி ஆயிடும். அப்பாடி பின்னூட்டமிடாததுக்கு ஒரு நல்ல காரணம் கண்டுபிடிச்சு சொல்லிட்டோம்ல.எப்படி நம்ம சமாளிப்புகேசன்.

என்னங்க நான் ரெடி, நீங்க ரெடியா. நான் போட்டுத்தாக்கப்போறேன். அப்புறம் இதில 1,2,3ங்கிறது எனக்குப் பிடிச்ச வரிசையெல்லாம் கிடையாதுங்க.. சும்மாங்காச்சும்..

வலைப்பூக்களில் விரும்பிப் படிப்பது

1. ரெம்ப்பப் பெரியவங்க அவங்க அனுபவச் சுரங்கத்தில இருந்து வெட்டி எடுத்து தர்ற அனுபவத் தங்கம் ரெம்ப பிடிக்குமுங்க. அவங்க ஈடுபடுற துறை வேற வேற இருந்தாலும் என்க்கு ரெம்பப் பிடிக்குமுங்க.. எங்க தாதா/அப்பாகிட்ட உக்காந்துகிட்டு அவங்க அனுபவத்த கேட்கிற மாதிரி இருக்குங்க எனக்கு.. தருமி, டோண்டு,டி.பி.ஆர். ஜோசஃப் ஐயாக்கள் எல்லாம் இதில expertங்க. பெரியவங்க பார்த்து நிறைய எழுதுங்க.

2. திறந்த மற்றும் சுதந்திர மென்பொருள்கள் பற்றியும், அதற்குப்பின்னால உழைச்சவங்க பத்தியும் சொல்ற பதிவுகள். மேலும் புது கணிணி மென்பொருளப் பத்தியும் கணிணி ஜாம்பாவான்கள் பத்தியும் யாரச்சும் பதிவு போடுங்க.. ஏற்கனவே நாங்க பயன்படுத்ற மென்பொருள்ல இன்னும் சிறப்பா பயன்படுத்றதுக்கு நிறைய டிப்ஸ் கொடுங்க.. நம்ம வெங்கட் நிறைய எழுதுவாரு.. இப்ப என்னாச்சுன்னே தெரியல.

3. நீங்க இருந்த/இருக்கிற ஊரு, நாடு, கலாச்சாரம் அப்படின்னு அதப்பத்தி நிறைய எழுதுங்க..எங்களுக்கு ரெம்பப் பிடிக்கும்.. உங்களுக்கு ரெம்ப சாதரணமா தெரியறது எல்லாம் எனக்கு ஒரு புது தகவல்ங்க.. அப்புறம் உங்க துறை சார்ந்த தகவல்கள் எல்லாம் எங்களுக்குப் பிடிக்கிற மாதிரி எழுதுங்க. எங்களுக்கு ரெம்பப்பிடிக்கும். நம்ம பத்மாக்க்கா இதில கலக்குறாங்க.

4. நல்ல சிறுகதைகள்,கவிதைகள் எழுதுங்க.. படிக்கிறதுக்கு நான் ரெடியா இருக்கேன். ஆனால் பெரிய,பெரிய கதையா எழுதி போரடிச்சுராதீங்க..அப்புறம் ஆபிஸ்ல தூங்கிறவங்க பத்தி எழுதுன ஜோக்கெல்லாம் நிஜமாப்போயிடும்.

5. விளையாட்டு வர்ணனைகள் பத்தி நிறைய எழுதுங்க.. இதில நம்ம பத்ரி பெரிய பிஸ்து. கிரிக்கெட் மட்டும் இல்லங்க.. கால்பந்து, கூடைபந்து, ரக்பின்னு நிறைய எழுதுங்க.. அதுக்காக சும்மா ஸ்கோர்போர்ட மட்டும் போட்டு ரிசல்ட் சொல்லாதிங்க..

6. ஒரு செய்தித்தாள்ல ஒரு செய்திய எடுத்துட்டு ( எல்லாத்துக்கும் பிடிக்ற மாதிரி ஒரு செய்தி ) உங்க கருத்த ஆழமா, தெளிவாச் சொல்லுங்க.. இதிலயும் நம்ம பத்ரி பெரிய வஸ்தாது. அவர் எழுதிற அந்த டெம்ப்லட் எனக்கு ரெம்பப் பிடிக்கும். நான் ரெம்ப நாள கண்ணு வைச்சுகிட்டு இருக்றது இது மாதிரி டெம்ப்லட்ல எழுதுறதுக்கு. ஆனா சொந்தமா கருத்தச் சொல்ல சரக்கு இல்லங்க.. அதினால தோத்துப் போயிடுவேன். ஆனால் என்னைக்குனாலும் ஒருநாளு அவரவிட நல்லா எழுதி பேரும், புகழும் எடுக்கல நான்.. ( மீதிய அண்ணாமலை ரஜினியாட்டம் நான் சொல்றதா நினைச்சுக்கோங்க..)

7. எனக்குப் பிடிச்ச மார்க்கட்டிங் பத்தி எழுதுனா ரெம்பப் பிடிக்கும். நம்ம மீனாக்ஸ் இதுல கில்லாடி.

8. சினிமாவப் பத்தி நல்ல சுடச்சுட விமர்சனம் எழுதுங்க. நான் திருட்டு விசிடியில பார்க்க படம் செலக்ட் பண்ண ரெம்ப உதவியா இருக்குங்க. ரெம்ப முக்கியமா பிற மொழிப்படங்கள் பத்தி நிறைய எழுதுங்க.. நிறையப் புது மொழி, முகங்கள அறிமுகப்படுத்துங்க..

9. இசை (திரை, கர்நாடக சங்கீதம்) பத்தி நிறைய எழுதுங்க.. நம்ம வெங்கட் இப்ப ஜாஸ் பத்தி எழுதிக்கிட்டு இருக்காரு. ரெம்ப நல்லா இருக்குது.. அதுபோல புகைப்படக் கலைகள் பற்றியும் நீங்க எடுத்த சிறந்த புகைப்படத்தயும் போடுங்க.. அது எடுத்த விதம் , தொழில்நுட்பம் கண்டிப்பாச் சொல்லனும். இல்லாட்டி எனக்கு கூகிள் படத்தேடலா அல்லது பதிவான்னு சந்தேகம் வந்துடும்..

10. தரமான, சகமனிதர் யாரையும் புண்படுத்தாத உயர்தரமான நகைச்சுவைப்பதிவுகள். நம்ம அல்வாசிட்டி அண்ணாச்சி இதில கிங்குங்க. மனிசன் நான் எழுதுறதுல எப்படியோ எனக்கே தெரியாமா பாதிக்கிறாருங்கோ..

என்னப்பொறுத்தவரைக்கும் நல்ல பதிவுன்னா நாலுபேருகிட்ட பெருமையா நான் படிச்சத சொல்லவோ , பரிந்துரைக்கிற மாதிரி இருக்கனுங்க. குடும்பத்தில சகலபேரும் படிக்கிற மாதிரி இருக்கணுங்க. ரெம்ப பயனுள்ளதா இருக்கணுங்க.. சிந்திக்கிறமாதிரி இருக்கணுங்க.. சுருக்கமா சொல்லணும்னா உங்கபதிவு என் சிந்தனை வெடிச்சுரங்கத்த வெடிக்க வைக்கிற வெடிமருந்தாக, பற்றி எரிய வைக்கும் கிரியாஊக்கியாக.. இது போல பல ஆக... இருக்கணுங்க..

நம்ம காசி ஒருதபா "பிடுங்கி நடப்பட்ட மரம்னு" ஒரு பதிவு போட்டாருங்க..அது ஒரு நல்ல உதாரணங்க.. அதப்படிச்சுப்போட்டு நான் செஞ்சதுங்க..

1. நான் இந்தியா போகப்போறேன்கிறத இவ்வளவு அழகா இத விட எப்படி சொல்றதுன்னு யோசிச்சேன்?
2. நான் எப்ப ஊருக்குப் போகப்போறேன்னு கொஞ்சம் யோசிச்சேன்?
3. மரத்த பிடுங்கி நடறது எப்படின்னு கூகுலாண்டவரிடம் கேட்டேன்.. நிறைய விசயம் தெரிஞ்சுக்கிட்டேன்..
4. இதப்போல நல்ல உவமையோடதான் எழுதனும்னு முடிவுசெஞ்சு நாலங்சு உவமைங்க சேகரிச்சேன்..
5. நான் சும்மா லீவுக்கு ஊருக்குப்போயிட்டு வர்றத சொல்றதுக்கு என்ன உவமை சொல்லாம்னு யோசிச்சேன்.

இப்படி என்ன கொஞ்சம் சிந்திக்க, வேறு பல நல்ல விசயங்களப் பத்தின சிந்தனைக்குத் தூண்டினா அதுதான் சிறந்த பதிவு..

இன்னும் சிலபேர் தலைப்பிலயே எல்லாத்தையும் சொல்லிடுவாக..
"செய்தியோடையில் சாக்கடையைக் கலக்கிறது மைக்ரோசாப்ட்"

அப்படின்னு நம்ம வெங்கட் ஒரு மேட்டர் எழுதுனாரு.. தலைப்பிலய எல்லாத்தையும் சொல்லீட்டாரு..


வலைப்பூக்களில் வெறுத்து ஒதுக்குவது

1. ரெகுலரா எழுதாம, ஆடிக்கொருதரம், அமாவாசைக்கொருதரம்னு எழுதுறவங்க.. இவங்களப்பாத்த நான் கங்குலியப் பாத்த சேப்பலாயிடுவேன்.
"இந்திய கிரிக்கெட் டீம் பதிவுகள்"னு முத்திரை குத்தி ஒதுக்கீடுவேன்.

2. எப்பவுமே எதிர்மறையாவே பேசுறவங்க, எழுதுறவங்க.. இவங்கப் பதிவுகளப் பார்க்கும்போதெல்லாம் எனக்குப் பரிதாபம்தாங்க வரும். ஆனா நம்ம சண்டைக்கோழிமாதிரி பேசுனா அடுத்தவங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு என்க்குப்ப் புரியவைச்சவங்க இவங்க.
"சண்டைக்கோழி"ங்கன்னு முத்திரை குத்தி ஒதுக்கீடுவேன்.

3. சமயம் சார்ந்த சண்டை, சாதி சார்ந்த சண்டைனு இவங்களப்பார்த்தவுடனே துண்டக்காணேம், துணியக்காணோமுன்னு ஓடிடுவேன். நிக்கமாட்டேன்ல.
ஏன்னா அதெல்லாம் ரெம்பப் பெர்சனல்னு நினைக்கிறவன் நான்.

தனிமனித தூசனம், தனிமனித துதி , நடிக துதி, சாதித் துதி, மதத் துதி, புலி ஆதரவு/எதிர்ப்பு, குறிப்பிட்ட எழுத்தாளரை மட்டும் போட்டுத்தாக்குறது இல்ல போற்றுகிறது அப்படின்னு அடுத்தவங்கள மனிசனா மதிக்கத்தெரியாதவங்க, அவங்க உணர்வுகளுக்கு மதிப்புத் தராதவங்க என்ன எழுதுனாலும் படிக்கிறது இல்லங்க.. அவங்க நல்ல எழுதுனாலும்.தமிழ் வலைப்பதிவுகள்ல 95% பதிவுகளை இப்படி ஒதுக்கி வைச்ச வலைப்பதிவு அன்னப்பறவைங்க நான்..
"விசிலடிச்சான் குஞ்சுப் பதிவுகள்"னு முத்திரை குத்தி ஒதுக்கீடுவேன்.

4. அப்புறம் என்ன மாதிரி.. கானமயிலாட கண்ட வான்கோழிங்க மாதிரியான பாத்ரூம் சிங்கர்கள். சும்மாச்சுனாட்டும் வைச்சு மணல்வீடு கட்டி விளையாடுற அமெச்சுருங்க.. அவங்களுக்கு,
"மணல்வீடடு மன்னாருன்னு" முத்திரை குத்திடுவேன். ஆனா ஒதுக்க மாட்டேன்.. ஹி..ஹீ :)

டிஸ்கிளைமர்:

உங்கள் தனிப்பட்ட ரசனைகளில் தலையிடுவதாக எண்ண வேண்டாம். இது எனது மனதிற்குப்பட்டது. எனக்குப் பிடிக்காததை நியாப்படுத்தி / ஆதரித்து கருத்து விட்டு உங்கள் விசைப்பலகையை அடித்துத் துன்புறுத்த வேண்டாம். நாய்வால நிமித்தப்பார்க்காதீங்க. :) நல்ல பதிவு எழுதி உங்க எதிர்ப்ப தெரியப்படுத்துங்கள்.

சரிங்க, அங்க நிறைய பேரு உலக்கைய சாரி கலப்பைய தூக்கிட்டு அடிக்க வர்ற மாதிரி தெரியுதுங்க.. நான் உத்தரவு வாங்கிக்கிடுறேங்க.. மறுபடியும் சொல்றேன்.

ஹலோ, இது எல்லாம் எனது சொந்தக் கருத்துங்க.. தப்பா எதுவும் எழுதி இருந்தா
அசிங்கமா திட்டாம, கழுதைக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்னு விட்டிடுங்க.. என்னதான் பிசா கொடுத்தாலும் கழுத, பிசா வந்த அட்டைப்பெட்டியத்தான் திங்குமாம்னு கருத்து காத்தவராயன் சொன்ன கருத்த எனது ரசனைன்னு நினைச்சு விட்டுடுங்க..

அப்புறம் நான் என்ன மாதிரியான வலைப்பதிவுகள பிடிக்கும், எதிர்பார்கிறேன்னு இன்னும் டீடயிலா ஊறப்போட்டு அடுத்த தபா சொல்றேங்க..

உங்க விருப்பு வெறுப்பையும் எழுதுங்க. நீங்களும் இதைப்படித்து கருத்துக் கூறாமல் மீமீச்சங்கிலியை உடைத்தால் உங்கள் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் பதிவு போட்டது உங்க மேலதிகாரிகளுக்கு தெரியக்கடவது.. தமிழ்மணத்தில் உங்கள் பச்சைவிளக்கு அணையக்கடவது.

3 comments:

பினாத்தல் சுரேஷ் said...

Good Start, Nice post.

(ippatippatta pinnuttaththukku oru template kodukka koodathaa?

-/பெயரிலி. said...
This comment has been removed by a blog administrator.
அன்பு said...

ரவி,

அருமையான அலசல்... பலரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய பதிவு.

உங்களுடைய பல பதிவுகளை இன்றுதான் வாசித்தேன். பெரும்பாலான பதிவுகள் அருமை, பயனுள்ள ஒன்று. மிக்க நன்றி தொடருஙகள்.