Saturday, May 21, 2005

கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்து - இந்து மதம்
சரஸ்வதி


ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய வுணர்விக்கு மென்னம்மை - தூய
வுருப் பளிங்கு போல் வாளென் உள்ளத்தின் உள்ளே
யிருப்பளிங்கு வாரா திடர்.

படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்
கல்லுஞ்சொல் லாதோ கவி.

- கம்பர் இயற்றிய சரசுவதி அந்தாதியிலிருந்து

கடவுள் வாழ்த்து - கிறிஸ்தவ மதம்

தூய திரு இதயம்

சிலுவை அடையாளம்

பிதா/சுதன்/பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்

கிறிஸ்து கற்பித்த செபம்
விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக.
உமது ஆட்சி வருக.
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல
மண்ணுலகிலும் நிறைவேறுக.
இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்,
தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்.
("ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ")

ஆமென்.

மங்கள வார்த்தை செபம்
அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே/ பெண்களுக்குள் ஆசிர்வதிக்க்கப்பட்டவள் நீரே/ உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசிர்வாதிக்கப்பட்டவரே.

அர்ச்சியஸ்ட மரியாவே/ சர்வேசுரனுடைய மாதவே, பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்போதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்.

ஆமென்.


திருத்துவப்புகழ்
பிதாவுக்கும் சுதனுக்க்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக/ ஆதியிலே இருந்தது போல/ இப்போதும் என்றென்றும் இருப்பதாக.

ஆமென்

கடவுள் வாழ்த்து - இஸ்லாம்

காபா பள்ளிவாசல்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாவின் திருப்பெயரால்(துவக்குகிறேன்).

அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாவுக்கே ஆகும்.

(அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.

(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்)

(இறைவா) உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம்.

நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக. நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.


புனித குரான் (அத்தியாயம் 1 , அல்பாத்திஹா)

1 comment:

பால் ரவிசங்கர் said...

சோதனைப் பின்னூட்டம்