Monday, August 22, 2005

மைக்ரோசாப்ட் தமிழக அரசு ஒப்பந்தம் -

ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி: மைக்ரோசாப்ட் தமிழக அரசு ஒப்பந்தம்

சென்னை:

20,000 பள்ளி ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட் நிறுவனமும், தமிழக அரசும் செய்து கொண்டுள்ளன.

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழக அரசின் சார்பில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் கிரிஜா வைத்யநாதனும், மைக்ரோசாப்ட் சார்பில் இந்தியாவுக்கான அதன் இயக்குனர் ரவி வெங்கடேசனும் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, இன்னும் 5 ஆண்டுகளில் சென்னையில் அதி நவீன தகவல் தொழில்நுட்பக் கழகத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்படுத்தித் தரும். இதற்கான இடத்தை தமிழக அரசு வழங்கும். அந்த இடத்தில் தகவல் தொழில்நுட்பக் கழகத்தை இலவசமாகவே மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்படுத்தித் தரும்.

இதுதவிர 5 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் கம்ப்யூட்டர் பயிற்சியை அளிக்கும். 40 பேர் கொண்ட குழுக்களாக ஆசிரியர்கள் பிரிக்கப்பட்டு பயிற்சி வழங்கப்படும்.

இதன் மூலம் நேரடியாக 20,000 ஆசிரியர்களும், மறைமுகமாக 10 லட்சம் மாணவர்களும் இந்தப் பயிற்சியால் பலனடைவர்.

இதுதவிர பள்ளிகளில் கற்பிக்கப்படும் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத் திட்டத்தை வடிவமைப்பதிலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தமிழக அரசுக்கு உதவும்.

நன்றி: தட்ஸ்தமிழ்
  • இன்னும் ஐந்து வருசத்துக்கு தமிழ்நாட்ட அந்த ஆண்டவனால கூட காப்பாத்தமுடியாது.
  • அம்மா ஓசில எல்லாத்துக்கும் சைக்கிள் கொடுத்தாங்க, பள்ளிக்கூட கம்ப்யூட்டர் எல்லாத்துக்கும் வைரஸ் கொடுத்துட்டாங்க.

தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும். இறுதியில் தருமமே வெல்லும்.

No comments: