Friday, January 13, 2006

வந்தாச்சு வந்தாச்சு தண்டர்பேர்ட்(Thunderbird ) 1.5

வந்தாச்சு வந்தாச்சு தண்டர்பேர்ட் 1.5 , சும்மா நச்சுன்னு இருக்கு நம்ம தண்டர்பேர்ட் 1.5


தண்டர்பேர்ட் மின்னஞ்சல், RSS மற்றும் செய்தித்தொகுதிக்கான ஒரு முழு அளவிலான ஒரு பயன்பாட்டு பொருளாகும். மைக்ரோசாப்டின் அவுட்லுக் போன்ற ஒரு மின்னஞ்சல் செயலி. இது மொசிலா நிறுவனத்தால் இலவசமாக , திறந்த முறையில் வெளியிடப்படுகிறது. ஏற்கனவே மொசிலா பையர்பாக்ஸ் என்ற பெயரில் இணைய உலாவியை இலவசமாக வெளியிட்டு மைக்ரோசாப்டின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இது மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரசை விட அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்டது.

இந்தப் புதிய பதிவு 1.5 கீழ்க்கண்ட புதிய வசதிகளைக் கொண்டுள்ளது.

  • தானகவே புதிய பதிப்புகளைக் கண்டறிந்து தேவையானதை மட்டுமே உயர்தரப்படுத்தும் வசதி.
  • தானகவே மின்னஞ்சல் முகவரிகளை கண்டறிந்து நிறைவு செய்யும் வசதி
  • தானகவே பிழை நீக்கும் வசதி
  • மின்னஞ்சல்களில் தேடும் மேம்படித்தப்பட்ட வசதி
  • மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகள்
  • போட்காஸ்டிங் மற்றும் RSS பயன்பாட்டு மேம்பட்ட வசதிகள்
  • தானகவே Draft என்ற பெயரில் அனுப்பாத அஞ்சல்களைச் சேகரிக்கும் வசதி.
என்பது போன்ற பலப்பல வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும் திறந்த நிரல்நிறை முறையில் வெளியிடப்பட்டுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக லினக்ஸ் போன்ற பாதுகாப்பான இயக்கு தளங்களிலும் இயங்குமாறு உள்ளது.

மறக்காமல் உபயோகித்துப் பாருங்கள்.

தமிழ்மணம் கூகிள் குழுமத்தில் கடைசி 15 மடல்கள் எனது தண்டர்பேர்டில்





4 comments:

ENNAR said...

பயன் படுத்திச் சொல்லுங்கள்

ஞானவெட்டியான் said...

அன்பு பவுல்ரவிசங்கர்,

தங்களின் தமிழ்மண உதவிக் கையேடு மிகவும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
தங்களின் காலத்தைச் சிலவு செய்து, மற்ற அநுபவமற்ற நண்பர்களுக்காகத் தாங்கள் செய்த தன்னார்வத் தொண்டுக்குப் பாராட்டுக்களும், நன்றியறிதலும்.

doondu said...

தமிழ்கோமணத்திற்கும் காசிக்கும் நன்றாகவே கொட்டை தாங்கும் பவுல்ரவிசங்கர் அவர்களுக்கு நன்றி.

எங்கள் பார்ப்பன ஜாதியை வாழ்த்தி பதிவு போடுங்கள். இல்லை என்றால் தமிழ்கோமணத்தில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள்.

ilavanji said...

பவுல்ரவிசங்கர்,

தமிழ்மண உதவிக் கையேட்டுக்கு நன்றி...