Saturday, December 17, 2005

சிவகாசியில் தேசிய புத்தக கண்காட்சி

சிவகாசியில் 21-வது தேசிய புத்தக கண்காட்சி தொடக்கம் பற்றிய செய்தி. சிவகாசியில் நேஷனல் புக் டிரஸ்ட் (புது டில்லி) மற்றும் விருதுநகர் தமிழ் வளர்ச்சிதுறை, சிவகாசி பாரதி இலக்கிய சங்கம், நியுசெஞ்சுரி புக் ஹவுஸ் ஆகியவை இணைந்து சேனை தலைவர் திருமண மண்டபத்தில் 21-வது தேசிய புத்தக கண்காட்சியை நடத்துகிறது. கண்காட்சி இன்று மாலை (17-ந் தேதி) தொடங்குகிறது.

தொடக்க விழாவில் கவிஞர் திலகபாமா தலைமை தாங்குகிறார். நியுசெஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை வழங்குகிறார். விருதுநகர் தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் முத்தையா முன்னிலை வகிக்கிறார். கண்காட்சியை வணிக வரித்துறை உதவி ஆணையர் தேவேந்திர பூபதி திறந்து வைக்கிறார். பேராசிரியர் ஆனந்தகுமார் சிறுகதை எழுத்தாளர் முத்து பாரதி ஓவியர் குற்றாலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

முடிவில் நியு செஞ்சுரி புக் ஹவுஸ் கிளை மேலாளர் கோட்டைச்சாமி நன்றி கூறுகிறார். கண்காட்சி இன்று(டிசம்பர் 17) தொடங்கி ஜனவரி 1-ந் தேதி வரை நடைபெறுகிறது.

தகவல் உதவி : மாலைமலர்

ஒவ்வொரு வருடமும் சிறப்பான முறையில் நடந்து வரும் இப்புத்தகக் கண்காட்சியினைக்காண , சிவகாசியைச் சார்ந்தவன் என்ற முறையில்அனைவரையும் வருக, வருக என வரவேற்கிறேன்.

பாம்பன்ன பாலம். சிவகாசின்னா ஜாலம்.

2 comments:

சுந்தரவடிவேல் said...

புத்தகக் கண்காட்சி சிறக்க வாழ்த்துக்கள்! ஒரு உதவி செய்ய இயலுமா? கண்காட்சியில் தமிழில் குழந்தைகளுக்கான புத்தகங்களின் நிலை குறித்து (எண்ணிக்கை, தரம், வெளியீட்டாளர்கள், விலை இத்யாதி) ஒரு பதிவு எழுத முடியுமா? நன்றி!

mathibama.blogspot.com said...

வணக்கம் நான் திலகபாமா. இந்த செய்தி உங்கள் பக்கத்தில் வந்திருப்பது ஆச்சரியத்தோடு பார்க்கின்றேன். நன்றி