Thursday, June 02, 2005

லீனக்ஸ் பிறந்தது எப்படி?

அசெம்பிள் செய்யப்பட்டுப் பல வருடங்கள் ஆன பிறகும் ஆபரேட்டிங் சிஸ்ட பாக்கியம் இல்லாத ஒரு இன்டெல் சிப் தாங்கிய கம்ப்யூட்டர், பிரம்மாவை நோக்கித் தவமிருந்து, பல ஆண்டு கடுந்தவத்திற்குப் பிறகு பிரம்மா தோன்றி லீனக்ஸைத் தந்தருளினார்.

அதாவது, 1980களின் இறுதியில் ஃபின்லாந்து நாட்டில் ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவரான லீனஸ் டோர்வால்ட்ஸுக்கு (Linus Torvalds) யூனிக்ஸின் டெஸ்க்டாப் வடிவமான Minix-ல் திருப்தி இல்லாமல் போனது. மினிக்ஸைக் காசு கொடுத்து வாங்கவும் வசதி இல்லை.

மினிக்ஸை விடச் சிறந்த, இன்டெல் சிப் உள்ள கம்ப்யூட்டர்களில் இயங்கக் கூடிய ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம் அவருக்குத் தேவைப்படடது. அதை நாமே உருவாக்குவோம் என்று ஒரு ஆபரேட்டிங் சிஸ்டத்தை சிருஷ்டிக்கத் தொடங்கினார். இன்டர்நெட்டில் அதைப் பற்றி அறிவித்தார்.

மிக விரைவில் உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான புரோகிராமர்கள் அவருடன் சேர்ந்து உழைத்தார்கள். இப்படியாக 1994 ல் லீனக்ஸ் 1.0 வெளியானது. 1999ல் லீனக்ஸ் 2.2 வெளியானது. இன்று லீனக்ஸுக்குக் கிட்டத்தட்ட 35 வயது. க்ருசோ சிப்களைத் தயாரிக்கும் ட்ரான்ஸ்மெட்டா நிறுவனத்தில் புரோகிராமராக வேலை பார்க்கிறார் லீனஸ்.

யூனிக்ஸ் மாதிரி லீனக்ஸில் ஃப்ளேவர்கள் உண்டா?

அவரவர் தேவைக்கேற்ற லீனக்ஸ் distribution -கள் இருக்கின்றன. (செல்லமாக distro என்கிறார்கள்). ரெட் ஹாட், மாண்ட்ரேக், கோரல், VA - Caldera போன்ற நிறுவனங்கள் தங்கள் லீனக்ஸ் டிஸ்ட்ரோக்களை விற்கின்றன.

லீனக்ஸுக்கு மாற விரும்பும் விண்டோஸ் பயனாளிகள், புரோகிராமிங் வாசனை இல்லாதவர்கள் ஆகியோருக்கு லீனக்ஸ் மாண்ட்ரேக், கோரல் லீனக்ஸ் ஆகிய டிஸ்ட்ரோக்கள் இருக்கின்றன புரோகிராமர்களுக்கு டெபியன் ஜி.என்.யூ./லீனக்ஸ், Slackware ஆகியவை பொருந்தும். பல பெரிய வர்த்தக வெப்சைட்கள் ரெட் ஹாட் லீனக்ஸ் சர்வரில் இயங்குகின்றன.

ரெட் ஹாட்தான் மற்றதைவிட மிகப் பிரபலமான டிஸ்ட்ரோ. கோரல் லீனக்ஸ், டெபியனை வைத்து உருவாக்கப்பட்டது என்றாலும் மாண்ட்ரேக் மாதிரி டெஸ்க்டாப் பயனாளிகளை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டது. இவற்றில் உங்கள் தேவைக்கேற்ற டிஸ்ட்ரோவைப் பயன்படுத்தலாம்.

No comments: