Saturday, June 25, 2005

உச்ச கணிணியில் ஆதிக்கம் செய்யும் இயக்குதளம்

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா, சின்னக் குழந்தையும் சொல்லும்.. அது போல உச்சக் கணிணிகளில் ஆதிக்கம் செலுத்தும் இயக்குதளம் எதுவென்று கேட்டால் எல்லோரும் கண்ணைமூடிக்கொண்டு சொல்லிவிடுவார்கள். லினக்ஸ்னு உங்க பதில் இருக்கும். நன்று.

ஒவ்வொரு வருசமும் உலகிலுள்ள சூப்பர் கணிப்பொறிகளைப் பற்றிய தொகுப்பு www.top500.org என்ற தளத்தில் வெளியிடப்படும். இந்த வருடமும் வெளியாகி விட்டன.

ஆனால் இந்தத் தளத்தில் இந்தக் கணிணிகளில் பயன்படும் இயக்குதளம் பற்றிய தகவல்கள் இல்லை. ஆனால் போர்ப்ஸ் வலைதளத்தில் இதைப்பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
http://www.forbes.com/home/enterprisetech/2005/03/15/cz_dl_0315linux.html

முதல் 500 உச்சக்கணிணிகளில் இயக்குதளம்

லினக்ஸ் - 301
யுனிக்ஸ் - 189
BSD - 2
மைக்ரோசாப்ட் - 1
மற்றவை - 7

லினக்ஸ்ன் இலவசமான திறமூலத்தன்மை மற்றும் மாற்றங்கள் செய்வதற்கான வசதிகள் யுனிக்ஸ்ன் AIX மற்றும் சன்னின் சோலாரிஸ் முதலியவற்றை விட ஏற்புடையதாக உள்ளது.

உச்சகணிணி லினக்ஸுக்கு மாறீட்டாங்க, அப்ப உங்க கணிணி எப்போ?


Thursday, June 02, 2005

எங்கே உதவி பெறுவது?

ரெட் ஹாட் போன்ற லீனக்ஸ் சி.டி.களை காசு கொடுத்து வாங்குகிறீர்கள் என்றால் அந்த நிறுவனம் உங்களுக்கு உதவும். யாராவது கண்ணாடி போட்ட லீனக்ஸ் புரோகிராமரிடம் இரவல் வாங்கி இன்ஸ்டால் செய்தீர்கள் என்றால் கூடக் கவலை இல்லை.

இந்திய லீனக்ஸ் பயனாளிகள் குழு என்று ஒரு அற்புதமான குழு இருக்கிறது. www.linux-india.org சைட்டிற்குப் போனால் அங்கே மூன்று விதமான லீனக்ஸ் ஈ-மெயில் விவாத மேடைகளை (அயடைiபே டளைவள) பற்றி விபரம் கொடுத்திருப்பார்கள். அவையாவன : linux-india-help, linux-india-general, linux-india-programmers. லீனக்ஸ்-இண்டியா-ஹெல்ப் மெயிலிங் லிஸ்ட்டில் சேர்ந்த பின், ப்ரின்டரை எப்படி கன்ஃபிகர் செய்வது என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு ஈ-மெயில் அனுப்பினால் பத்து பேர் போட்டி போட்டுக் கொண்டு உங்களுக்கு பதில் சொல்வார்கள்.

சென்னை, மதுரை, தில்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூர், புனே உள்பட பல நகரங்களில் உள்ளூர் லீனக்ஸ் குழுக்கள் இருக்கின்றன.

இந்திய லீனக்ஸ் பயனாளிகளை எங்கே பிடிக்கலாம்?

மேற்சொன்ன அந்த மூன்று லிஸ்ட்களில், லீனக்ஸ் பற்றித் தொடர்ந்து அறிய, உதவி பெற, விவாதிக்க கீழ்க்கண்ட லிஸ்ட்களில் குறைந்தது ஏதாவது ஒன்றில் உறுப்பினர் ஆகுங்கள் :

http://lists.sourceforge.net/lists/listinfo/linux-india-help

http://lists.sourceforge.net/lists/listinfo/linux-india-general

http://lists.sourceforge.net/lists/listinfo/linux-india-programmers

புதியவர்கள் லீனக்ஸ்-இண்டியா-ஜெனரலில் சேரலாம். புதிதாக லீனக்ஸை இன்ஸ்டால் செய்யப் போகிறீர்கள், அல்லது இன்ஸ்டால் செய்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் லீனக்ஸ்-இண்டியா-ஹெல்ப் லிஸ்ட்டில் சேரலாம்.

இன்டர்நெட்டில் லீனக்ஸ் ?

இந்த சைட்களைத் தவற விடாதீர்கள்:

www.linux.com
www.linux.org
www.linuxdoc.org
www.linuxhelp.com
www.linuxstart.com
www.linux-newbie.com
www.linux-newbie.org
www.slashdot.org
www.freshmeat.net
www.linuxapps.com
www.linuxtoday.com
www.linux-mag.com
www.lwn.net
www.tamillinux.org

லீனக்ஸ் பிறந்தது எப்படி?

அசெம்பிள் செய்யப்பட்டுப் பல வருடங்கள் ஆன பிறகும் ஆபரேட்டிங் சிஸ்ட பாக்கியம் இல்லாத ஒரு இன்டெல் சிப் தாங்கிய கம்ப்யூட்டர், பிரம்மாவை நோக்கித் தவமிருந்து, பல ஆண்டு கடுந்தவத்திற்குப் பிறகு பிரம்மா தோன்றி லீனக்ஸைத் தந்தருளினார்.

அதாவது, 1980களின் இறுதியில் ஃபின்லாந்து நாட்டில் ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவரான லீனஸ் டோர்வால்ட்ஸுக்கு (Linus Torvalds) யூனிக்ஸின் டெஸ்க்டாப் வடிவமான Minix-ல் திருப்தி இல்லாமல் போனது. மினிக்ஸைக் காசு கொடுத்து வாங்கவும் வசதி இல்லை.

மினிக்ஸை விடச் சிறந்த, இன்டெல் சிப் உள்ள கம்ப்யூட்டர்களில் இயங்கக் கூடிய ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம் அவருக்குத் தேவைப்படடது. அதை நாமே உருவாக்குவோம் என்று ஒரு ஆபரேட்டிங் சிஸ்டத்தை சிருஷ்டிக்கத் தொடங்கினார். இன்டர்நெட்டில் அதைப் பற்றி அறிவித்தார்.

மிக விரைவில் உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான புரோகிராமர்கள் அவருடன் சேர்ந்து உழைத்தார்கள். இப்படியாக 1994 ல் லீனக்ஸ் 1.0 வெளியானது. 1999ல் லீனக்ஸ் 2.2 வெளியானது. இன்று லீனக்ஸுக்குக் கிட்டத்தட்ட 35 வயது. க்ருசோ சிப்களைத் தயாரிக்கும் ட்ரான்ஸ்மெட்டா நிறுவனத்தில் புரோகிராமராக வேலை பார்க்கிறார் லீனஸ்.

யூனிக்ஸ் மாதிரி லீனக்ஸில் ஃப்ளேவர்கள் உண்டா?

அவரவர் தேவைக்கேற்ற லீனக்ஸ் distribution -கள் இருக்கின்றன. (செல்லமாக distro என்கிறார்கள்). ரெட் ஹாட், மாண்ட்ரேக், கோரல், VA - Caldera போன்ற நிறுவனங்கள் தங்கள் லீனக்ஸ் டிஸ்ட்ரோக்களை விற்கின்றன.

லீனக்ஸுக்கு மாற விரும்பும் விண்டோஸ் பயனாளிகள், புரோகிராமிங் வாசனை இல்லாதவர்கள் ஆகியோருக்கு லீனக்ஸ் மாண்ட்ரேக், கோரல் லீனக்ஸ் ஆகிய டிஸ்ட்ரோக்கள் இருக்கின்றன புரோகிராமர்களுக்கு டெபியன் ஜி.என்.யூ./லீனக்ஸ், Slackware ஆகியவை பொருந்தும். பல பெரிய வர்த்தக வெப்சைட்கள் ரெட் ஹாட் லீனக்ஸ் சர்வரில் இயங்குகின்றன.

ரெட் ஹாட்தான் மற்றதைவிட மிகப் பிரபலமான டிஸ்ட்ரோ. கோரல் லீனக்ஸ், டெபியனை வைத்து உருவாக்கப்பட்டது என்றாலும் மாண்ட்ரேக் மாதிரி டெஸ்க்டாப் பயனாளிகளை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டது. இவற்றில் உங்கள் தேவைக்கேற்ற டிஸ்ட்ரோவைப் பயன்படுத்தலாம்.
லீனக்ஸில் என்னென்ன கிடைக்கும்?

மன நிம்மதி, சாஃப்ட்வேரைக் கேட்டால் லீனக்ஸ் சி.டி.யில் எல்லா வகையான புரோகிராம்களும் இருக்கின்றன. அதில் சில:

விண்டோஸ் போல் க்ளிக் செய்து பயன்படுத்தக் கூடிய Graphical User Interface(KDE, Gnome, Sawfish, IceWM...)

ஆஃபீஸ் பாக்கேஜ்கள் (KOffice, Star Office...)

எம்.எஸ். வேர்ட் மாதிரியான வேர்ட்ப்ராசசர்கள் (KWord, AbiWord, StarWriter....)

கோட் எழுதவும் உதவும் நோட்பேட் மாதிரி text editor-fŸ (KEdit, XEdit, Gnotepad…)

ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம்கள் (Konqueror...)

பவர்பாயின்ட் போன்ற ப்ரெசன்டேஷன் புரோகிராம்கள் (KPresenter)

ஃபைல் மேனேஜர்கள் (Konqueror...)

எம்.எஸ். -டாஸ் ப்ராம்ப்ட் மாதிரி லீனக்ஸ் டெர்மினல்கள் (Konsole, Xterm, rxvt, Eterm…)

ஈ-மெயில் சாஃப்ட்வேர்கள் (Netscape Messenger, KMail, Pine, elm...)


வெப் பிரவுசர்கள் (Netscape Navigator, Konqueror Web Browser, Mozilla என்று மூன்றும், வெறும் எழுத்து மட்டும் பார்த்து பிரவுஸ் செய்ய Lynx என்ற பிரவுசரும் இருக்கின்றன. இது தவிர பல பிரவுசர்கள் உண்டு)


சாட் புரோகிராம்கள்(Xchat, BitchX, girc..), instant messenger-fŸ (licq, Everybuddy, Kit, Yahoo சைட்டிலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளக் கூடிய Yahoo! Messenger...)

முக்கியமாக சி/சி++ கம்ப்பைலர்கள் (gcc), PHP, Perl, JDK, Python மற்றும் கம்ப்பைலர்கள், அசெம்பிளர்கள், debugger

MySQL என்ற அட்டகாசமான டேட்டாபேஸ் சாஃப்ட்வேர்

TCP/IP, telnet, FTP, வெப் சர்வர்கள் (Apache...), மெயில் சர்வர்கள் (sendmail, Qmail....), ppp சர்வர்கள், இன்டர்நெட் டயலிங் சாஃப்ட்வேர்கள்...

பல்வேறு firewall-கள், சங்கேதக் கருவிகள் (encryption tools),நெட்வொர்க் பாதுகாப்புக்கான சாஃப்ட்வேர்கள்.....


HTML editor (Screem, Blue Fish போன்ற சக்திவாய்ந்த எடிட்டர்கள், Netscape Composer...)

கிராஃபிக்ஸ் சாஃப்ட்வேர் (Gimp, XPaint, Electric Eye, காசு கொடுத்து வாங்க வேண்டிய Macromedia Flash....)

ஆடியோ, வீடியோ ப்ளேயர்கள் (Real Player, XMovie, Aktion....), சி.டி. ரைட்டிங் சாஃப்ட்வேர்கள்..

லீனக்ஸ் கையேடுகள் (லீனக்ஸ் தகவல் பதிவுத் திட்டத்திற்காக (Linux Documentaion Project) எழுதப்பட்ட கையேடுகள் 100க்கு மேற்பட்டவை. இன்னும் பல காரியங்களுக்கு கையேடுகளை எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். 1,000 பக்கங்களுக்கு மேல் தேறும்)

கால்குலேட்டர்கள், மிகப் பெரிய லெவலில் கணக்கு போடுவதற்கான புரோகிராம்கள், CPU வேகத்தைக் கணக்கிடுவதற்கு சி.பி.யூ. மானிட்டர் புரோகிராம்கள் என்ற பல உபயோகமான சின்னச் சின்ன கருவிகள்.

உலகில் இருக்கும் பல விதமான கேம்கள் (Aisle Riot v‹w bgaÇš Solitaire, Free Cell, செஸ், ரேஸ் கேம்கள், க்யூப் கேம்கள், ரத்த வெள்ளம் ஓடும் அட்வென்ச்சர் கேம்கள்..)

லீனக்ஸை இன்ஸ்டால் செய்வது கடினமா?

லீனக்ஸை இன்ஸ்டால் செய்வதற்கு புத்தர் மாதிரி பொறுமை வேண்டும். லீனக்ஸில் பல வடிவங்கள் அல்லது விநியோகங்கள் distributions) இருக்கின்றன. இதில் சில வகை லீனக்ஸ் விநியோகங்களை இன்ஸ்டால் செய்ய நிபுணர்களால்தான் முடியும் ( உதா: Debian GNU/Linux என்ற விநியோகம்).

ஆனால் Linux Mandrake, Corel Linux போன்ற விநியோகங்களை இன்ஸ்டால் செய்வது விண்டோஸ் அளவுக்கு ஈஸி. எனவே லீனக்ஸை இன்ஸ்டால் செய்வது மகா கடினம் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் உண்மை இல்லை. இன்டர்நெட் இணைப்பை configure செய்யும்போது கூட ஆள் தேவைப்படலாம். இது கொஞ்சம் லொள்ளு பிடித்த விஷயம்தான். இருந்தாலும் உதவ உங்கள் ஏரியாவிலேயே ஆள் இருப்பார்கள்.

லீனக்ஸ் : ஒரு அறிமுகம் - பகுதி 1

லீனக்ஸைப் பற்றி இன்று எல்லாரும் பேசுகிறார்கள். லீனக்ஸைப் பயன்படுத்துவது கடினம் என்பது மாறி புரோகிராமர்கள், நெட்வொர்க்கிங் நிபுணர்கள் தவிர மற்றவர்களும் லீனக்ஸைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். லீனக்ஸ் பயனாளிகளின் எண்ணிக்கை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. லீனக்ஸைப் பற்றித் தெரிந்து கொள்ள சரியான சமயம் இதுதான். இந்த அறிமுகத்தில் லீனக்ஸைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

லீனக்ஸ் என்பது என்ன?

GNU என்ற ஆபரேட்டிங் சிஸ்டமும் linux என்ற கெர்னலும் சேர்ந்த காம்பினேஷன், ஜி.என்.யூ./லீனக்ஸைத்தான் எல்லாரும் லீனக்ஸ் என்கிறார்கள். (ஒரு வசதிக்காக சுருக்கமாக லீனக்ஸ் என்று குறிப்பிடுகிறோம்). ஜி.என்.யூ., யூனிக்ஸை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு இலவச ஆபரேட்டிங் சிஸ்டம் (லைனக்ஸ் என்பது தவறான உச்சரிப்பு) லீனக்ஸின் முக்கிய அம்சங்கள் :

Multi-user: லீனக்ஸ் யூனிக்ஸின் ஜெராக்ஸ் காப்பி என்பதால் ஒரு லீனக்ஸ் கம்ப்யூட்டரை ஒரே சமயத்தில் பலர் பயன்படுத்த முடியும். விண்டோஸ் என்.டி.யை யாரும் வீட்டில் பயன்படுத்த முடியாது.

Multi-tasking : லீனக்ஸ் ஒரு நிஜமான மல்ட்டிடாஸ்க்கிங் ஆபரேட்டிங் சிஸ்டம். அதாவது ஒரே சமயத்தில் பல புரோகிராம்களை இயங்க வைக்க முடியும். வேகம் லீனக்ஸின் பலங்களில் ஒன்று.

இலவசம் : இலவசம் என்றால் காசு கொடுக்காமலே கிடைக்கும் என்பது மட்டும் இல்லை. இதன் நிரல் வரிகளும் (source code) சேர்ந்து கிடைக்கிறது. லீனக்ஸைப் பயன்படுத்துபவர்கள் இந்த நிரல் வரிகளைத் தங்கள் விருப்பப்படி மாற்றி கம்ப்பைல் செய்துகொள்ளலாம். லீனக்ஸ் சி.டி. வாங்கவேண்டும் என்றால் கூட கொஞ்சம்தான் செலவாகும். ரூ. 2,000 முதல் 7,000 வரை ஆகிறது. ஆனால் பெரும்பாலான லீனக்ஸ் புத்தகங்களுடன் தரப்படும் சி.டி.களில் லீனக்ஸ் இலவசமாகக் கிடைக்கிறது.

கம்ப்யூட்டர் பத்திரிகைகள் தொடர்ந்து லீனக்ஸை சி.டி.களில் இலவச இணைப்பாகத் தருகின்றன. இப்படி 100 ரூபாயிலும் முடித்துவிடலாம். லீனக்ஸை இன்டர்நெட்டிலிருந்தும் டவுன்லோட் செய்யலாம். அதை விட வசதி, நண்பர்களிடம் இரவல் வாங்கலாம்.

ஒவ்வொரு இந்திய நகரத்திலும் (நீங்கள் இந்தியாவில் வசிக்கவில்லை என்றால் உங்கள் நகரத்திலும்) லீனக்ஸ் பயனாளிகள் குழுக்கள் (Linux User Groups) இருக்கின்றன. இதன் உறுப்பினர்களிடம் கேட்டு வாங்கலாம். மற்ற ஆபரேட்டிங் சிஸ்டங்களைப் போலில்லாமல் லீனக்ஸைப் பல காப்பிகள் எடுத்து சகட்டுமேனிக்கு விநியோகிக்கலாம்.

லீனக்ஸுக்கும் மற்ற ஆபரேட்டிங் சிஸ்டங்களுக்கும் என்ன வித்தியாசம்?

(மற்ற ஆபரேட்டிங்க சிஸ்டங்கள் என்றால் விண்டோஸ் என்று அர்த்தம். சில சமயம் மெக்கின்டாஷ், யூனிக்ஸ் ஆகியவற்றையும் சேர்க்கலாம்)

எம். எஸ். -டாஸ், விண்டோஸ் ஆகியவை இன்டெல் 386,486 ப்ராசசர்களின் திறன் முழுவதையும் பயன்படுத்துவதில்லை. லீனக்ஸ், ப்ராசசரின் எல்லா வசதிகளையும் பயன்படுத்துகிறது.


விண்டோஸ், மெக்கின்டாஷ் ஆகிய ஆபரேட்டிங் சிஸ்டங்களில் மல்ட்டி யூசர், மல்ட்டி டாஸ்க்கிங் வசதிகள் இல்லை. லீனக்ஸில் இருக்கிறது. விண்டோஸ் என்.டி. மல்ட்டி யூசர் ஆபரேட்டிங் சிஸ்டம் என்றுதான் பெயர். ஆனால் லீனக்ஸ் போன்ற நெட்வொர்க் ஆபரேட்டிங் சிஸ்டங்களில் பயனாளிகளுக்குக் கிடைக்கும் நிஜமான தனி அடையாளம், பாதுகாப்பு அதில் கிடைக்காது. யூனிக்ஸிலிருந்து வந்ததால் லீனக்ஸ் ஒரு `ஆழமான' மல்ட்டி யூசர் ஆபரேட்டிங் சிஸ்டம். லீனக்ஸில் நம் இஷ்டப்படி மாற்ற முடிகிற வசதி (customisability) இருக்கிறது.


விண்டோஸை விட லீனக்ஸ் வேகமாக செயல்படுகிறது. சரியான ஹார்டுவேர் மட்டும் இருந்துவிட்டால் ஒழுங்காக configure செய்தால் லீனக்ஸ் க்ராஷ் ஆவதில்லை. அப்படி ஆகிவிட்டால் அதை போஸ்ட்மார்ட்டம் செய்ய க்ராஷ் ஆன விபரங்கள் core என்று தனியாக ஒரு ஃபைலில் பதிவாகி இருக்கும். அதைப் படித்து பிரச்னையைக் கண்டுபிடித்து னநரெப செய்து விடலாம்.


ஒரே கம்ப்யூட்டரில் லீனக்ஸ், விண்டோஸ் இரண்டையும் தனித்தனி பார்ட்டிஷன்களில் போட்டு வைப்பது சகஜம். லீனக்ஸ் பார்ட்டிஷனிலிருந்து லீனக்ஸ் ஃபைல் மேனேஜரைப் பயன்படுத்தி விண்டோஸ் பார்ட்டிஷனில் இருக்கும் ஃபைல்களைப் பார்க்க முடியும். விண்டோஸில், லீனக்ஸ் பார்ட்டிஷனில் இருப்பவை மேல் கை வைக்கவேண்டும் என்றால் அதற்கென்று ஒரு தனியாக ஒரு சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்யவேண்டும்.

ஒரு சாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்தால் விண்டோஸில் செய்வது போல் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

பவர்கட் போன்ற விபத்துக்களால் கம்ப்யூட்டா சரியாக அணைக்காமல் விட்டுவிட்டீர்கள் என்றால் விண்டோஸ் பாதிக்கப்படும். சில ஃபைல்கள் சேதமாகும். லீனக்ஸ் இரு போன்ற அதிர்ச்சிகளைத் தாங்கும் வல்லமை படைத்தது. விண்டோஸில் ஒரு புரோகிராம் ரிப்பேர் ("Hang" ஆயிடுச்சு) ஆகிவிட்டால் சிஸ்டமே ஸ்தம்பித்துப் போய்விடும். அதை ரீபூட் செய்து தொலைக்க வேண்டும். லீனக்ஸில் ஒரு புரோகிராம் உறைந்து போனாலும் பிரச்சனை இல்லாமல் வேலை பார்த்துக் கொண்டிருக்க முடியும். ஒரு புரோகிராம் முழு ஆபரேட்டிங் சிஸ்டத்தையும் கட்டிப் போட்டுவிடாது.

லீனக்ஸ் மிகப் பழைய இன்டெல் ப்ராசசர்களில் கூட வேகமாக இயங்கும். மற்ற ஆபரேட்டிங் சிஸ்டங்களைப் போலில்லாமல் லீனக்ஸ் 4 எம்.பி. ராமில் சுறுசுறுப்பாக செயல்படும். ஆனால் குறைந்தபட்சம் 16 எம்.பி. ராம் இருந்தால் KDE, Gnome போன்ற விண்டோஸ் பாணி கிராஃபிக்ஸ் இன்டர்ஃபேஸ்களைப் பயன்படுத்த வசதியாக இருக்கும்.

புரோகிராமிங் தெரியும் என்றால் லீனக்ஸ் கெர்னலை (Kernel: ஆபரேட்டிங் சிஸ்டத்தின் மூளை போல் செயல்படும் சாஃப்ட்வேர்) உங்கள் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி re-compile செய்து கொள்ளலாம். இதுவும் மற்ற ஆபரேட்டிங் சிஸ்டங்களில் இல்லாத விஷயம், டிவைஸ் டிரைவர்கள், புரோகிராம்கள் என்று எல்லாவற்றின் Source code-ஐயும் மாற்றி கோடிங் செய்து பயன்படுத்த, விநியோகிக்க முடியும்.


வேறு எந்த ஆபரேட்டிங் சிஸ்டத்திலும் இல்லாத அளவுக்கு லீனக்ஸில் இலவசமாக ஏராளமான புரோகிராமிங் சாஃப்ட்வேர்கள், வெப்சர்வர்கள் கிடைக்கின்றன. உங்களுக்கு எந்த சாஃப்ட்வேர் எல்லாம் வேண்டுமோ அவற்றை மட்டும் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.

லீனக்ஸுக்கு இருப்பது போல் பயனாளிகள் குழுக்கள் வேறு எந்த ஆபரேட்டிங் சிஸ்டத்திற்கும் இல்லை. லீனக்ஸ் உள்ள கம்ப்யூட்டரில் ஒரு பிரச்னை வந்தால் லீனக்ஸ் பயனாளிகளுக்கான இன்டர்நெட் விவாத மேடை ஒன்றில் ஒரு ஈ-மெயில் போட்டால் போதும். நீங்கள் பிரச்னையைச் சொன்ன சில நிமிடங்களில் பலரிடமிருந்து பதில் வந்துவிடும். லீனக்ஸ் பயனாளிகள் எப்போதும் சக பயனாளிகளுக்கு உதவத் தயாராக இருப்பார்கள். இது லீனக்ஸ் கலாச்சாரத்தின் தனிச்சிறப்பு.

லீனக்ஸுக்கு வைரஸ் தொல்லை அதிகம் இல்லை. லீனக்ஸை பாதிக்கக்கூடிய வைரஸ்கள் 27.8.2001 நிலவரப்படி நான்கே நான்குதான். லீனக்ஸை ஒரு வைரஸ் தாக்குவது தெரிந்தால் பொதுவாக சில மணி நேரங்களில் இன்டர்நெட்டில் அதற்கான நிவாரணி கிடைத்துவிடும்.

Wednesday, June 01, 2005

ஹலோ (வலை) உலகமே!

#include 
main()
{
cout << "Hello World! ";
}

கணிணியோடு பரிச்சையமானவர்கள் அனைவரும் தங்கள் முதன் முதல் வரைதிட்டத்தில் (Program) கண்டிப்பாக இது போன்ற தொன்றை செய்திருப்பார்கள்.

இதைப்போன்று மற்ற எல்லா மொழிகளிலும் எப்படி இது போன்றவற்றை எழுதுவதைப்ப்ற்றிய ஒரு சுட்டி.