Thursday, June 02, 2005

லீனக்ஸில் என்னென்ன கிடைக்கும்?

மன நிம்மதி, சாஃப்ட்வேரைக் கேட்டால் லீனக்ஸ் சி.டி.யில் எல்லா வகையான புரோகிராம்களும் இருக்கின்றன. அதில் சில:

விண்டோஸ் போல் க்ளிக் செய்து பயன்படுத்தக் கூடிய Graphical User Interface(KDE, Gnome, Sawfish, IceWM...)

ஆஃபீஸ் பாக்கேஜ்கள் (KOffice, Star Office...)

எம்.எஸ். வேர்ட் மாதிரியான வேர்ட்ப்ராசசர்கள் (KWord, AbiWord, StarWriter....)

கோட் எழுதவும் உதவும் நோட்பேட் மாதிரி text editor-fŸ (KEdit, XEdit, Gnotepad…)

ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம்கள் (Konqueror...)

பவர்பாயின்ட் போன்ற ப்ரெசன்டேஷன் புரோகிராம்கள் (KPresenter)

ஃபைல் மேனேஜர்கள் (Konqueror...)

எம்.எஸ். -டாஸ் ப்ராம்ப்ட் மாதிரி லீனக்ஸ் டெர்மினல்கள் (Konsole, Xterm, rxvt, Eterm…)

ஈ-மெயில் சாஃப்ட்வேர்கள் (Netscape Messenger, KMail, Pine, elm...)


வெப் பிரவுசர்கள் (Netscape Navigator, Konqueror Web Browser, Mozilla என்று மூன்றும், வெறும் எழுத்து மட்டும் பார்த்து பிரவுஸ் செய்ய Lynx என்ற பிரவுசரும் இருக்கின்றன. இது தவிர பல பிரவுசர்கள் உண்டு)


சாட் புரோகிராம்கள்(Xchat, BitchX, girc..), instant messenger-fŸ (licq, Everybuddy, Kit, Yahoo சைட்டிலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளக் கூடிய Yahoo! Messenger...)

முக்கியமாக சி/சி++ கம்ப்பைலர்கள் (gcc), PHP, Perl, JDK, Python மற்றும் கம்ப்பைலர்கள், அசெம்பிளர்கள், debugger

MySQL என்ற அட்டகாசமான டேட்டாபேஸ் சாஃப்ட்வேர்

TCP/IP, telnet, FTP, வெப் சர்வர்கள் (Apache...), மெயில் சர்வர்கள் (sendmail, Qmail....), ppp சர்வர்கள், இன்டர்நெட் டயலிங் சாஃப்ட்வேர்கள்...

பல்வேறு firewall-கள், சங்கேதக் கருவிகள் (encryption tools),நெட்வொர்க் பாதுகாப்புக்கான சாஃப்ட்வேர்கள்.....


HTML editor (Screem, Blue Fish போன்ற சக்திவாய்ந்த எடிட்டர்கள், Netscape Composer...)

கிராஃபிக்ஸ் சாஃப்ட்வேர் (Gimp, XPaint, Electric Eye, காசு கொடுத்து வாங்க வேண்டிய Macromedia Flash....)

ஆடியோ, வீடியோ ப்ளேயர்கள் (Real Player, XMovie, Aktion....), சி.டி. ரைட்டிங் சாஃப்ட்வேர்கள்..

லீனக்ஸ் கையேடுகள் (லீனக்ஸ் தகவல் பதிவுத் திட்டத்திற்காக (Linux Documentaion Project) எழுதப்பட்ட கையேடுகள் 100க்கு மேற்பட்டவை. இன்னும் பல காரியங்களுக்கு கையேடுகளை எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். 1,000 பக்கங்களுக்கு மேல் தேறும்)

கால்குலேட்டர்கள், மிகப் பெரிய லெவலில் கணக்கு போடுவதற்கான புரோகிராம்கள், CPU வேகத்தைக் கணக்கிடுவதற்கு சி.பி.யூ. மானிட்டர் புரோகிராம்கள் என்ற பல உபயோகமான சின்னச் சின்ன கருவிகள்.

உலகில் இருக்கும் பல விதமான கேம்கள் (Aisle Riot v‹w bgaÇš Solitaire, Free Cell, செஸ், ரேஸ் கேம்கள், க்யூப் கேம்கள், ரத்த வெள்ளம் ஓடும் அட்வென்ச்சர் கேம்கள்..)

லீனக்ஸை இன்ஸ்டால் செய்வது கடினமா?

லீனக்ஸை இன்ஸ்டால் செய்வதற்கு புத்தர் மாதிரி பொறுமை வேண்டும். லீனக்ஸில் பல வடிவங்கள் அல்லது விநியோகங்கள் distributions) இருக்கின்றன. இதில் சில வகை லீனக்ஸ் விநியோகங்களை இன்ஸ்டால் செய்ய நிபுணர்களால்தான் முடியும் ( உதா: Debian GNU/Linux என்ற விநியோகம்).

ஆனால் Linux Mandrake, Corel Linux போன்ற விநியோகங்களை இன்ஸ்டால் செய்வது விண்டோஸ் அளவுக்கு ஈஸி. எனவே லீனக்ஸை இன்ஸ்டால் செய்வது மகா கடினம் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் உண்மை இல்லை. இன்டர்நெட் இணைப்பை configure செய்யும்போது கூட ஆள் தேவைப்படலாம். இது கொஞ்சம் லொள்ளு பிடித்த விஷயம்தான். இருந்தாலும் உதவ உங்கள் ஏரியாவிலேயே ஆள் இருப்பார்கள்.

1 comment:

பரணீ said...

வலைப்பதிவுலகிற்கு வருக வருக..
தொடர்ந்து இது மாதிரி எழுதுங்கள்.