Wednesday, November 02, 2005

குடி வீட்டுக்கு மட்டுமே கேடு

இன்றைய தினமலரில் கோவைக் குடிமகன்களின் சாதனைச் செய்தி. கோவை வடக்கு, தெற்கு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட கோவை 1ல் உள்ள 228 மதுக்கடைகளில் 7,400 பெட்டிகள் மது, 3,500 பெட்டிகள் பீர் தீபாவளிக்கு முன் ஒரு நாளில் மட்டுமே விற்றுள்ளது. இதன் மதிப்பு 2,43,00,000 ரூபாய்கள். பொள்ளாச்சி,உடுமலை, வால்பாறை, அவிநாசி, பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட கோவை 2ஐச் சேர்ந்த குடிமகன்களும் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று குடித்து தீர்த்தவைகள். 278 கடைகளில் 7,500பெட்டிகள் மது, 4,500 பெட்டிகள் பீர். இவற்றின் மதிப்பு அதிகமல்ல சும்மா 2,75,00,000 ரூபாய்கள் மட்டுமே. அக்டோபரில் மட்டுமே கோவைக்குடிமகன்கள் குடித்து தீர்த்தவைகள் சுமார் 80 கோடிகள் மட்டுமே. இதில் குடிசார்ந்த உபதொழில்களின்(Allied Industries ஊறுகாய், காலிப் புட்டிகள், சுண்டல், மீன்வறுவல்) வருமானம் சேர்த்தி இல்லை.

1. தினமலர் மற்ற மாவட்டங்களின் சாதனையும் பட்டியலிடாமல் இருட்டடிப்பு செய்ததைக் கண்டிக்கின்றேன். தினமலருக்கு கோவைமாவட்டத்திடம் மட்டும் ஏன் இந்த கரிசனம்?
2. இந்தச் சாதனைக்கு காரணமான டாஸ்மார்க் தாய், ஜெயலலிதாவைப் பாரட்டுகிறேன். அவரது ஆட்சிக்குப் பாஸ்மார்க் தருகிறேன்.
3. குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும் என்று எழுதிவிட்டு ஏன் அரசாங்கமே டாஸ்மார்க் கடைகள் நடத்துகிறது?
4. குடிப்பழக்கம் வீட்டுக்கும்,நாட்டுக்கும் கேடு என்று எழுதியிருக்கும் பிரச்சார வாசகத்தை, குடிப்பழக்கம் வீட்டுக்கு கேடு , (தமிழ்)நாட்டுக்கு இலாபம் என்று மாற்றவும்.குடி வீட்டுக்கு மட்டுமே கேடு.


குடிகெடுக்கும் இந்தக் குடிப்பழக்கத்தை ஏன் எல்லோரும் செய்கின்றனர். எதற்காகக் குடிக்கின்றனர்?

1. தாகம் தணிக்க (இளநி குடிங்கப்பா.. தண்ணி அடிக்காதீங்க..)
2. அதிகம் குடித்து விட்டு தங்கள் நிதானம் இழந்து தன்னை மறக்க ( கவலைகள மறக்கவாம்..?)
3. சமூகத்திற்காக குறிப்பாக நண்பர்களுடன் ( உங்களை குடிக்கச் சொல்லுகிறவர் உண்மையிலேயே நண்பரா, உங்கள் முதல் எதிரியா)
4. குடி, பழக்கமாகவே மாறி விட்டதாலா?
5. மரபுகளுக்கா

தன்னம்பிக்கை இல்லாத, நல்ல பழக்க வழக்கங்கள்,மரபுகளின் மீது நம்பிக்கை இல்லாத ஒருவரால்தான் குடிக்கு அடிமையாக முடியும். சும்மா நான் என்னைக்காவது ஒருநாள்தான் குடிக்கின்றேன் என்று சொல்பவர்கள் கூட குடியர்கள்தான். இவர்கள் எல்லாத்தையும் விட தங்கள் கவலைகளை மறக்க முடியாமல் குடிப்பவர்களின் நிலைமை ரெம்பப் பரிதாபம். இவங்களைப்பத்தி ஆட்டோகிராப்பில் ராஜேஸ் வாயிலாக சேரன் நெத்தியடி தந்திருப்பார். தயவு செய்து அதை ஒருதடவைப் பார்க்கவும்.

குடியினால் உடல்நலக்கேடுகள், பொருளாதரக் கேடுகள், சமூகம் சார்ந்த கேடுகள் ஏற்படுகின்றது என்று தெரிந்தே குடிப்பவர்களை என்ன செய்வது..? இதற்கு ஒரு முடிவே கிடையாதா?

உங்கள் வாய் உலர்ந்துள்ளதா, தலைவலி உள்ளதா? எரிச்சல், மந்தம்,சிவந்த கண்கள், வெளிச்சம் மற்றும் சத்தங்களைப் பார்க்க / கேட்க முடிவதில் பிரச்சனைகளா , வாந்தி வருகிறதா, குடி பற்றி எழுதிய என்னைத் திட்ட வேண்டும் என்றுள்ளதா ..கவலைப்படாதீர்கள், தீபாவளி,அதற்கு முந்தய நாட்களில் குடித்த மப்பு இன்னும் குறையாமல் அவதிப்படுகிறீர்கள். உங்கள்
ஹேங்ஒவரைக்குறைக்க வழிகள் இதோ..

1. நிறையத் தண்ணீர் குடியுங்கள்
2. மினரல்கள் மிகுந்த ஊறுகாய் சாப்பிடவ்ய்ம்
3. பிட்சா மற்றும் சண்ட்வீச் சாப்பிடலாம்
4. காப்பி அருந்தவும்
5. ஆரஞ்சுச் சாறு அல்லது விட்டமின் C, B1
6. முட்டைக்கோசு இலைகள் அல்லது தக்காளிச் சாறு

மேலதிக்க விபரங்களுக்கு:
http://en.wikipedia.org/wiki/Alcoholism