Monday, October 31, 2005

சன் டிவியின் ஜங்க் - தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

உலக வலைப்பூக்களில் முதல்முறையாக தமிழ்மாலை வலைப்பதிவில் சன் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள், நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்னரே அலசப்படுகிறது. படப் பைத்தியங்கள் என்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் பைத்தியங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம்.

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்
http://www.sunnetwork.in/specials/diwali/SunTV/suntv.htm

06:00 - 06:30 AM-பாமாலை - பக்திப்பாடல் - உண்ணிகிருஷ்ணன் - (சினிமா 30 நிமிடங்கள்)
06:30 - 07:00 AM-இசைக் கோலாகலம் - ராஜேஸ் வைத்தியா - (சினிமா 30 நிமிடங்கள்)
07:00 - 08:00 AM-சிறப்பு வணக்கம் தமிழகம் - பாரத் - (சினிமா 60 நிமிடங்கள்)
08:30 - 09:00 AM-சிறப்பு புதுப்பாடல்- (சினிமா 30 நிமிடங்கள்)
09:00 - 09:30 AM-நட்சத்திர சந்திப்பு - அசின் - (சினிமா 30 நிமிடங்கள்)
09:30 - 10:00 AM-சிறப்பு திரைக் கண்ணோட்டம் - (சினிமா 30 நிமிடங்கள்)
10:00 - 10:30 AM-நட்சத்திர சந்திப்பு - தனுஸ், செல்வராகவன் - (சினிமா 30 நிமிடங்கள்)
10:30 - 11:30 AM-சிறப்பு பட்டி மன்றம் - சாலமன் பாப்பையா
11:30 - 01:30 PM-படையப்பா - திரைப்படம் - (சினிமா 200 நிமிடங்கள்)
01:45 - 03:00 PM-திரைப்படம் தொடர்ச்சி
03:00 - 03:30 PM-சிறப்பு நகைச்சுவை நேரம் - (சினிமா 30 நிமிடங்கள்)
03:30 - 04:30 PM-சிறப்பு திரைக் கண்ணோட்டம் - அது ஒரு கனாக்காலம் - (சினிமா 30 நிமிடங்கள்)
04:00 - 04:30 PM-சிறப்பு திரைக் கண்ணோட்டம் - மஜா - (சினிமா 30 நிமிடங்கள்)
04:30 - 05:00 PM-சிறப்பு திரைக் கண்ணோட்டம் - சிவகாசி - (சினிமா 30 நிமிடங்கள்)
05:00 - 05:30 PM-நட்சத்திர சந்திப்பு - வடிவேலு - (சினிமா 30 நிமிடங்கள்)
05:30 - 06:00 PM-நட்சத்திர சந்திப்பு - விஜய் - (சினிமா 30 நிமிடங்கள்)
06:00 - 06:30 PM-திரைப்படம் - வசூல்ராஜா MBBS - (சினிமா 240 நிமிடங்கள்)
06:33 - 08:00 PM-திரைப்படம் தொடர்ச்சி
08:00 - 08:30 PM-சன் நியுஸ் - (சினிமா அல்ல 30 நிமிடங்கள்)
08:30 - 10:30 PM-திரைப்படம் தொடர்ச்சி
10:30 - 11:00 PM-சிறப்பு திரைக் கண்ணோட்டம் - பம்பரக்கண்ணாலே - (சினிமா 30 நிமிடங்கள்)

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் காலை 6 மணி முதல் இரவு 11 மணி முடிய. மொத்தம் 12 மணி நேரங்கள். ( 720 நிமிடங்கள் ).

இதில் ,

சன் நியூஸ் - 60 நிமிடங்கள்
பட்டி மன்றம் - 60 நிமிடங்கள்
இசை - 60 நிமிடங்கள்
சன் டிவிக்கு வருமானம் தரும் விளம்பரங்களின் நேரம் குறைந்தது 60 நிமிடங்கள்

இந்த 240 நிமிடங்கள் தவிர்த்த 480 நிமிடங்களும் (சுமார் 8 மணி நேரம் ) சினிமா, சினிமா..

தாங்கள் வீணாக்கப் போகும் நேரங்களின் வகைகள்.


சன் டிவி, தான் கோடிக்கணக்கில் ரூபாய் கொட்டி வாங்கிய படங்களுக்கு நல்ல விளம்பரம் செய்கிறது.

அதற்கு மத்தியில் சுமார் 60 நிமிடங்கள் விளம்பரம் செய்து கொள்ளை இலாபம் செய்கின்றது.

படாதிபதிகளுக்கும் ஓசியில் விளம்பரம். டிவி விளம்பரம் மிச்சம்.

இதை நாம் கேபிள் கனக்சன், டிவி, மின்சாரம் என்று காசு கொடுத்தும், பொன்னான நம் நேரத்தைச் செலவழித்தும் பார்க்கப் போகிறோம்.

ஒவ்வொரு படமும் குறைந்தது 4 மணி நேரம் ஓடப்போகிறது, ஒருவேளை Making Of Padayappa மற்றும் ஹிந்தி முன்னாபாய் MBBSம் சேர்த்துப் போடப்போகிறார்களோ..

இவர்கள் என்று திருந்தப்போகிறார்களோ?

இவர்களைப் பார்க்கும் போது பல்க் போல்டர்களில் மெயில் படிப்பவர்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது :(

டிஸ்கிளைமர்:

1. சன் டிவி அபிமானிகள் , தமிழ்ப் பட அபிமானிகள் என்னைத் திட்டாமல், சன் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி இந்திய நேரப்படி தமிழில் தரப்பட்டுள்ளதை அச்சு செய்து எல்லா நிகழ்ச்சிகளையும் தவறாமல் பார்க்க வேண்டுகிறோம். எல்லோருக்கும் இலவசமாக அனுப்பலாம்.

2. விசிலடிச்சான் குஞ்சுகள் தங்கள் தலைவன் சின்னத்திரையில் தோன்றும் நேரத்தைப் பார்த்து தவறாமல் வீட்டிலும் விசிலடித்து விட்டு தங்கள் இளைய தலைமுறைக்கும் கற்றுத்தர வேண்டுகிறேன்.

3. நான் ஜெயா டிவி / ராஜ் மற்றும் விஜய் டிவி அபிமானி இல்லை. எனக்கும் அம்மா கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

புரட்சி போட்டி

சன் டிவியின் ஜங்க் - தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை முழுவதும் பார்த்து அதில் வரும் விளம்பரங்களின் எண்ணிக்கையைக் கூட்டி சொல்பவர்களுக்கு ஒரு ஆச்சரியமான பரிசு காத்திருக்கிறது. விரையுங்கள்!

5 comments:

யாத்ரீகன் said...

இது ஒரு ஆழமான பதிவு ;-)

நல்ல அலசலுங்கோ !!!!


ஒரு விடுமுறை நாளும் அதுவுமா, வீட்ல எல்லோரும் சேர்ந்த்து சாப்பிடாம, பேசாம... டீவியே கதினு இருக்குறதை,எப்போதான் உணரப்போராங்களோ...

பெத்தராயுடு said...

இது ஒரு நல்ல பதிவு ;-)

Thekkikattan|தெகா said...

Television = Idiot Box. How true it is. I always wonder be at any festivel why on all TV we see only the brainless cinema people on that day? Interviewing them and asking them even when did they go to bathroom last time.

How important it is for us to know a fellow human being went to bathroom or not. I do not understand this trend. Sun TV is now launched throughout the world broadcasting service (so it says), why can not they satisfy the other people's longings also (targeting people live outside of India). Like on the festivel day just ask a stupid camera man to walk outside of their studio and film HOW PEOPLE ARE CELEBRATING THE FESTIVEL...REALLY LITERALLY.

Of course, they are showing it on a news clip but why not on full length. I am sick of watching some dumbo "whats his name" talking about his school day memories etc., It is disgusting. Sun TV wake up.

G.Ragavan said...

சன் டீவியை இந்த முறை பார்க்கவேயில்லை. வசூல்ராஜா எம்.பீ.பீ.எஸ் மட்டும் கொஞ்ச நேரம் பார்த்தேன். அதை விட ஜெயாவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி இருந்தது. அதைக் கொஞ்ச நேரம் பார்த்தேன். அதை முழுவதுமாகப் பார்க்க ஆசை. ஆனால் விருந்திற்குச் செல்ல வேண்டியிருந்ததால் பார்க்க முடியவில்லை. ஆனால் மிகவும் ரசித்தது விஜயில் வந்த மிஸஸ் டவுட்பயரின் தமிழாக்கம். சிறப்பாக இருந்தது. மாறுதலாகவும் நன்றாகவும் இருந்தது.

Alex Pandian said...

Good post.
Can you also enable display of names of commentors ? Right now it is not visible - only time is displayed.