
பதிவிறக்கம் செய்ய வேண்டிய முகவரி
மேலாதிக்க விபரங்களுக்குப் பார்க்க: கூகுள் செய்திகள்
தமிழ் ஓப்பன் ஆபீஸ் 1.1 தொகுப்புகளை [விண்டோஸ் மற்றும் லினக்ஸ் பொதிகளை ] பின்வரும் சுட்டிகளிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
- http://trinetra.ncb.ernet.in/bharateeyaoo/download/index.html [இந்தியாவிலுள்ள சேவையகம் - விண்டோஸ்/லினக்ஸ் பொதிகளுக்கு]
- ftp://lightsource.physics.utoronto.ca/pub/venkat/openoffice/win32/ [கணடாவிலுள்ள சேவையகம் - விண்டோஸ் பொதி மட்டும்]
ஓப்பன்ஆபீஸ் பற்றிய ஒரு சிறு குறிப்பு
ஓப்பன்ஆபீஸ் - இது ஒரு விடுதலை மனப்பாங்கோடு உருவான மென்பொருள் ஆவணத்திட்டம். இதன் அடிப்படை கொள்கை வாசகம்: "ஒரு சமுதாய முயற்சியாக, முன்னோடியான பன்னாட்டு பயன்பாட்டிற்கு உகந்த , அனைத்து முக்கிய அடிப்படை செயலிகளிலும் இயங்கக்கூடிய அலுவலகப் பயன்பாட்டுச் செயலித்தொகுப்பை உருவாக்குவது மற்றும் இத்தொகுப்பின் அனைத்து செயல்பாடுகளையும் மற்ற செயலிகளிலும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் திறவூற்று ஆணையின் கீழ் APIகளாகவும் XML சார்ந்த கோப்புப் படிவமாக அளிப்பது ஆகும்."
OpenOffice.org என்பது , இதன் அடிப்படையில் உருவாக்கப்படும் மென்பொருள் தொகுப்பையும் குறிக்கும். இது ஒரு பரி அலுவலக மென்பொருற்தொகுப்பாகும். இதில் உரைதொகுப்பு செயலி, விரிவுத்தாள், வழங்கல், வரையும் செயலி, ஹெச்டிஎம்எல் தொகுப்பி முதலியவை அடங்கும். இந்த அலுவலக மென்பொருள்தொகுப்பு அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்ககூடியது. இது தற்போது விற்பனையில் இருக்கும் மற்ற அலுவலக மென்பொருள்தொகுப்புகளுக்கு நிகரானத் தரத்தில் உள்ளது. ஆகையால் இது மற்ற விலைக்கு விற்கப்படும் அலுவலக மென்பொருள்தொகுப்புகளுக்கு ஒரு இலவச மற்றும் தரமான மாற்றாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே கணிணி பயனர்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து, பயன்படுத்துவதோடு மட்டும்மல்லாமல் அனைவருக்கும் இதைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment