Saturday, January 07, 2006

போடுங்கம்மா ஓட்டு நம்ம தமிழ்மணத்தப் பாத்து.

போடுங்கம்மா ஓட்டு நம்ம தமிழ்மணத்தப் பாத்து.
இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?
பனமரத்துல வவ்வாலா, நம்ம தமிழ்மணத்துக்கே சவாலா?

நமது கட்சியின் பிரச்சார எவுகணை, கலப்பைக் கலைவேந்தன், தமிழ்மணத்தை மணக்கச் செய்யும் தமிழ்மாலை, புரட்சி சுனாமி , பிளாக் புயல், நந்தவன நாயகன் பவுலடிகளார் நமது தமிழ்மணத்தை ஆதரித்து இப்போது பேசுவார்..

(இடியென கைதட்டல் மழை.... ;)

அன்புத் தாய்மார்களே, அருமை வலையுலக உடன்பிறப்புகளே, என் உயிரினும் மேலான பில்லியன்கணக்கான வலையுலக இரசிகர்களே , அலுவலக நேரத்தில் எட்டிப் பார்ர்க்கும் கழகக் கண்மணிகளே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம்.

எனக்கு முன் பேசிய அண்ணன் பிரகாசார் வரும் வலைப்பதிவுகள் தேர்தலில் இந்த வருடம் பல்வேறு தலைப்பில் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதிலே, சிறந்த வலைத்திரட்டிக்கான விருதில், 'தமிழ்மணம்' nominate செய்யப்பட்டிருக்கிறது என்றும் கூறி அமைந்தார். நமது வேட்பாளர் தொழில்நுட்ப ரீதி, திரட்டியின் வேகம், ஒரிஜினல் ஐடியா, பின்னூட்டங்களைத் திரட்டும் வசதி, என்று பல்வேறு விதமான தன்மைகளால், வசதிகளால் பலமடங்கு தகுதியும், திறமையும் படைத்த செயல் வீரன் என்பதில் சந்தேகமேயில்லை.

எனவே வழக்கம் போல ஆயிரம் நொல்லை சொல்லிக்கொண்டு ஓட்டுச் சாவடிக்குச் செல்லாமல் இருப்பவர்களும், அலுவலக நேரத்தில் வலைப்பூ மேயும் என்போன்ற அயிரக்கணக்கான தமிழ்மண விசிறிகளும் மறக்காமல் நம் தமிழ்மணத்திற்கு ஓட்டுப் போடுமாறு வேண்டுகிறேன்.

நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் இந்தியா முழுவதும் வலைப்பூ பதிபவர்கள் மத்தியிலும், தமிழ் வலைப்பூ வாசகர்கள் அனைவருக்கும் தமிழ்மணத்தை அறிமுகப் படுத்த ஒரு நல்ல வாய்ப்பு.

எனவே மறந்து விடாதீர்கள்... உங்கள் பொன்னான வாக்குகளை தமிழ்மணத்திற்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் வாக்கினைப் பதிவு செய்யும் முறைகள்

1. ஓட்டுச் சாவடிக்குச் செல்ல வலைத் தடம்: http://indibloggies.org/final-polls-begin

2. ஓட்டுச் சீட்டு வாங்கும் இடம்



3. கையில் மைவக்கும் இடம்


4. மறைவிடத்தில் வாக்களிக்க வேண்டிய இடம் மற்றும் நமது வேட்பாளரின் பெயர்



அப்பால நீங்க வீட்டுக்கு வந்துடலாம். அம்புட்டுதேன்.

ஓட்டுப்போட கடைசி நாள் 10 ஜனவரி 2005.

எனவே அலைகடலென , சைபர் வீதியில் திரண்டு வாரீர். உங்கள் பொன்னான வாக்குகளை நம் தமிழ்மணத்திற்கு அள்ளித்தாரீர்.

எனக்கு மேலும் சில, பல அலுவல்களும், இலச்சக்கணக்கான கூட்டங்களும் இருப்பதால் எனது பேச்சினை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த்..

2 comments:

கசி said...

முதன்முதலில் தமிழ்கோமணம் தொடங்கிய எனக்கு அலைகடலென ஆதரவு. இப்போது நொந்தவனம் தொடங்கி இருக்கிறேன். புடுங்கி நடப்பட்ட மரமாகிய நான் சத்தியமாக பெரிய புடுங்கி எல்லாம் இல்லை.

பொன்னம்பலம் said...

கொஞ்சம் புரியுற மதிரி யாராவது எழுதினா, நாங்களும் ஓட்டுப் போடுவோமில்ல!